புத்தகயை
புத்தகயை | |
|---|---|
நகரம் | |
போதி மரம் மலை ஆசிரமம், விந்தியப் பகுதியில் Maitreya Buddha at இந்தியத் தொல்லியல் ஆய்வகம் | |
| ஆள்கூறுகள்: 24°41′42″N 84°59′33″E / 24.6950°N 84.9925°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | கயா மாவட்டம் |
| பரப்பளவு (2015)[A 1] | |
| • City | 20.2 km2 (7.8 sq mi) |
| • Regional planning | 83.78 km2 (32.35 sq mi) |
| மக்கள்தொகை (2018) | |
| • மொத்தம் | 48,184 |
| மொழி | |
| • அலுவல் | இந்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 824231 |
| வாகனப் பதிவு | BR-02 |
| |
| Bodh Gayā மொழிபெயர்ப்புகள் | |
|---|---|
| சமசுகிருதம் | बोधगया (IAST: Bodhagayā) |
| பாளி | बोधगया, Classical: उरुवेला (Bodhagayā, Classical: Uruvelā) |
| வங்காளம் | বুদ্ধ গয়া |
| பருமியம் | ဗုဒ္ဓဂါယာ |
| சீனம் | 菩提伽耶 (Pinyin: Pútíjiāyé) |
| இந்தோனேசியம் | Bodh Gaya |
| சப்பானியம் | ブッダガヤ/仏陀伽耶 (Rōmaji: Buddagaya) |
| கெமர் | ពុទ្ធគយា (UNGEGN: Bŭdh Geăyéa) |
| கொரிய | 부다가야 (RR: Budagaya) |
| மோன் | ဗုဒ္ဓဂါယာ |
| சிங்களம் | බුද්ධගයා |
| திபெத்தியம் | བྱང་ཆུབ་སྙིང་པོ་ |
| தமிழ் | புத்தகயை |
| தாய் | พุทธคยา / โพธคยา (RTGS: Phutthakhaya / Phothakhaya) |
| வியட்நாமியம் | Bồ Đề Đạo Tràng |
| பௌத்த சொல்லடைவு | |
புத்தகயை (புத்த கயா அல்லது உள்ளூர் உச்சரிப்பின்படி போத்கயா (ஹிந்தி: बोधगया)), இந்திய மாநிலமான பீகாரின் கயா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். கௌதம புத்தர் இங்குள்ள அரசமரத்தடியில் (போதி மரம்) ஞானம் பெற்ற இடம் என்பதால், உலகம் முழுவதுமுள்ள பெளத்தர்களுக்கு புத்தகயா புனிதத் தலமாகத் திகழ்கிறது. முற்காலத்தில் போதிமண்டா எனப்பட்ட இவ்விடத்தில் பிக்குகள் தங்கும் பெரிய விகாரம் ஒன்று இருந்தது. புத்த காயாவில் உள்ள முதன்மையான துறவிமடம் போதிமண்டா விகாரையாகும். இது இப்போது மகாபோதி கோயில் என அழைக்கப்படுகிறது. கௌதம புத்தரின் வாழ்க்கையோடு தொடர்புடைய நான்கு யாத்திரைத் தலங்களில் புத்த கயாவே முதன்மையானதாகப் புத்த மதத்தினர் கருதுகின்றனர். மற்றவைகள் குசிநகர், லும்பினி, சாரநாத், கபிலவஸ்து, புத்த கயா, சாரநாத் மற்றும் சாஞ்சி ஆகும். 2002 ஆம் ஆண்டில் மகாபோதி கோயில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது..
பெளத்த சமயத்தை பின்பற்றும், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், ஜப்பான், சீனா, கம்போடியா போன்ற நாடுகளின் சார்பாக புத்தர் கோயில்கள் இங்கு கட்டப்பட்டுள்ளது.
மகாபோதி கோயில்
[தொகு]பாட்னாவிலிருந்து சுமார் 110 கி.மீ தொலைவில் 24°41′43″N 84°59′38″E / 24.69528°N 84.99389°E அமைந்துள்ள இந்த வளாகத்தில், வஜிராசனம் (போத் கயா) ("வச்சிர அரியணை") மற்றும் போதி மரம் ஆகியவற்றுடன் கூடிய மகாபோதி கோயில் அமைந்துள்ளது. இந்த போதி மரம், அசல் போதி மரத்தின் கிளையிலிருந்து வளர்க்கப்பட்டதாகக் கூறப்படும் இலங்கையின் ஜய சிறி மகா போதி மரத்தின் கன்றிலிருந்து பெறப்பட்டு வளர்க்கப்பட்டதாகும்.
புத்தர் ஞானோதயம் பெற்ற சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது தோராயமாக கி.மு. 250-இல், பேரரசர் அசோகர் இங்கு ஒரு மடத்தையும் வழிபாட்டுத் தலத்தையும் நிறுவுவதற்காக புத்த கயாவிற்கு வருகை தந்தார்.
இந்த ஆரம்பகால கோயிலின் சித்திரங்கள், கி.மு. 25-ஆம் ஆண்டைச் சேர்ந்த சாஞ்சி தூபி 1-ன் தோரணங்களிலும், ஆரம்பகால சுங்கப் வம்ச காலத்தைச் சேர்ந்த (தோராயமாக கி.மு. 185–73) பார்குத் தூபியின் கைப்பிடிச்சுவர் செதுக்கல்களிலும் காணப்படுகின்றன.[2]
பிற பௌத்த கோயில்கள்
[தொகு]- நிப்பான்ஜி கோயில் வளாகம்
- வங்காளதேச பௌத்த விகாரை
- தெர்கார் மடத்திலுள்ள பிரார்த்தனைச் சக்கரங்கள்
- மகாபோதி கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள இந்து ஜெகந்நாதர் கோயில்
- போத் கயாவிலுள்ள சீனக் கோயில் வளாகத்திலுள்ள பௌத்த சிற்பம்
சமுத்திரகுப்தரின் காலத்தைச் சேர்ந்த இலங்கை மன்னன் கித்திசிறிமேகன், போதி மரத்தை வழிபட வந்த சிங்களத் துறவிகளின் பயன்பாட்டிற்காக, சமுத்திரகுப்தரின் அனுமதியோடு மகாபோதி கோயிலுக்கு அருகில் ஒரு சங்காராமத்தைக் (மடாலயம்) கட்டினான். இந்தச் சங்காராமம் தொடர்பான தகவல்களைத் தான் நேரில் கண்டவாறு சுவான்சாங் விவரித்துள்ளார். புத்தகோஷர் துறவி ரேவதரைச் சந்தித்ததும், பின்னர் அவராலேயே இலங்கைக்குச் செல்ல ஊக்குவிக்கப்பட்டதும் இந்த இடத்தில்தான் எனக் கருதப்படுகிறது.
மகாபோதி கோயிலைச் சுற்றியுள்ள பரந்த பகுதியில் திபெத், மங்கோலியா, நேபாளம், ஜப்பான், கொரியா, கம்போடியா, லாவோஸ், மியான்மர், வியட்நாம், சிக்கிம், இலங்கை, தைவான், தாய்லாந்து, பூட்டான் மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்களால் பல பௌத்த கோயில்களும் மடாலயங்களும் கட்டப்பட்டுள்ளன. இக்கட்டடங்கள் அந்தந்த நாடுகளின் தனித்துவமான கட்டடக்கலை மற்றும் அலங்கார பாணிகளைப் பிரதிபலிக்கின்றன. சீனக் கோயிலில் உள்ள புத்தர் சிலை 200 ஆண்டுகள் பழமையானது மற்றும் சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்டதாகும். சப்பானின் நிப்பான் கோயில் தூபி வடிவத்தில் அமைந்துள்ளது. மியான்மர் (பர்மா) கோயிலும் தூபி வடிவில் பகான் பாணியை நினைவூட்டும் வகையில் உள்ளது. தாய்லாந்து கோயிலானது தங்க ஓடுகளால் வேயப்பட்ட சாய்வான, வளைந்த கூரையைக் கொண்டுள்ளதோடு, பிரம்மாண்டமான வெண்கல புத்தர் சிலையையும் கொண்டுள்ளது. தாய்லாந்து கோயிலுக்கு அருகில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் ஒரு பூங்காவிற்குள் 25 மீட்டர் உயரமுள்ள புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
பெரிய புத்தர் சிலை
[தொகு]புத்த கயாவில் "பெரிய புத்தர் சிலை" என்று அழைக்கப்படும் 80 அடி (24 மீட்டர்) உயரமுள்ள புத்தர் சிலை உள்ளது. இச்சிலை 18 நவம்பர் 1989 அன்று திறக்கப்பட்டுப் புனிதப்படுத்தப்பட்டது. இந்திய வரலாற்றிலேயே முதன்முதலாக அமைக்கப்பட்ட இந்தப் பிரம்மாண்ட புத்தர் சிலையை ஆசீர்வதித்துத் திறந்த புனிதப்படுத்தும் விழாவில் 14-வது தலாய் லாமா கலந்து கொண்டார்.[3] "புத்தரின் கோட்பாடுகளை உலக முழுமைக்கும் பரப்புவோம்" என்ற முழக்கத்தின் கீழ், 'டைஜோக்யோ' அமைப்பு 1,20,000 கொத்தனார்களைக் கொண்டு ஏழு ஆண்டுகள் பணியாற்றி இச்சிலையைக் கட்டி முடித்தது.
மகாபோதி கோயில் குண்டுவெடிப்புகள்
[தொகு]
7 சூலை 2013 அன்று 05:15 மணி வாக்கில் 2,500 ஆண்டுகள் பழமையான மகாபோதி கோயில் வளாகத்தில் ஒரு சிறிய தாக்கமுடைய குண்டு வெடிப்பானது நிகழ்ந்தது. இதைத் தொடர்ந்து தொடர்ச்சியான ஒன்பது தாக்கம் குறைந்த வெடிப்புகள் நடைபெற்றன. இதில் இரண்டு புத்த துறவிகள் காயமடைந்தனர். இதில் ஒருவர் திபெத்தையும், மற்றொருவர் பர்மாவையும் சேர்ந்தவரும் ஆவர். இந்த குண்டு வெடிப்புகளை இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான இந்தியன் முஜாகிதீன் நடத்தியது.[4][5] 80 அடி உயர புத்தர் சிலைக்கு கீழ் இருந்த ஒன்று மற்றும் கருமபா கோயிலுக்கு அருகில் இருந்த மற்றொன்று ஆகிய இரண்டு பிற வெடி குண்டுகள் காவல்துறையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டன.[6][7]
1 சூன் 2018 அன்று தேசிய புலனாய்வு முகமையின் ஒரு சிறப்பு நீதிமன்றமானது பட்னாவில் இதனுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட ஐந்து நபர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தது.[8]
மக்கள் தொகை
[தொகு]இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2001 கணக்கெடுப்பின்படி, புத்த கயாவின் மக்கள் தொகை 30,883 ஆகும். இதில் ஆண்கள் 54% பெண்கள் 46% ஆவர். புத்த கயாவின் சராசரி எழுத்தறிவு விகிதம் 51% ஆகும். இது தேசிய சராசரியான 59.5%-ஐ விடக் குறைவு. இதில் ஆண்களின் எழுத்தறிவு 63% மற்றும் பெண்களின் எழுத்தறிவு 38% ஆகும். மக்கள் தொகையில் 8% பேர் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆவர்.[9]
போக்குவரத்து
[தொகு]- பிகார் மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் பாட்னாவிலிருந்து ராஜ்கிர் வழியாக புத்த கயாவிற்குப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.[10]
- பாட்னாவிற்கும் புத்த கயாவிற்கும் இடையே 'வண்டர் ஆன் வீல்' என்ற சிறப்புச் சுற்றுலா ஊர்திச் சேவை பிகார் சுற்றுலாத் துறையால் தொடங்கப்பட்டுள்ளது.[11]
- கயா வானூர்தி நிலையம் புத்த கயாவிலிருந்து 7 கி.மீ (4 மைல்) தொலைவிலும், கயா சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து சுமார் 10 கி.மீ (6 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது.
- புத்த கயாப் பகுதியின் அமைதியினை உறுதிசெய்ய, இங்கு தானிகள், பேருந்துகளின் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கார்கள் அல்லது பேருந்துகளைப் பயன்படுத்த அனுமதிச் சீட்டு தேவையாகும். இங்கு சத்தமில்லாத மின்சார வாகனங்கள் மட்டுமே வாடகை வாகனங்களாகப் பெரிதும் கிடைக்கின்றன.
சாலைப்போக்குவரத்து
[தொகு]புத்த கயா, இந்திய-நேபாள எல்லையுடன் பீர்கஞ்சு-இரக்கசவுல் எல்லைக் கடப்புச் சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. காட்மாண்டவிலிருந்து வரும் பயணிகள் பொதுவாக இரக்கசவுல் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து, இரக்கசவுல், மேசி, முசாபர்பூர், பாட்னா மற்றும் கயாவை இணைக்கும் சாலை மூலம் புத்த கயாவை அடைகிறார்கள். பிகார் அரசும் இந்திய அரசும் புத்த கயாவைப் புத்த மதச் சுற்றின் (ஒரு முக்கிய இடமாக அடையாளம் கண்டு, தேசிய நெடுஞ்சாலை வலைப்பின்னல் மூலம் இதன் சாலை இணைப்பை மேம்படுத்தி வருகின்றன.[12][13]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Decisions adopted by the 26th Session of the World Heritage Committee" पत्रांक-213: राजगीर क्षेत्रीय आयोजना क्षेत्र एवं बोधगया आयोजना क्षेत्र के सीमांकन एवं घोषणा (PDF). hindustantimes.com. Urban Development Housing Dept., Government of Bihar, Patna. 15 April 2015. p. 62. Archived from the original (PDF) on 18 June 2015. Retrieved 18 June 2015.
{{cite web}}: More than one of|work=and|website=specified (help) - ↑ Sharma, Yashraj. "Buddhism's holiest site erupts in protests over Hindu 'control' of shrine". Al Jazeera (in ஆங்கிலம்). Retrieved 2025-05-23.
- ↑ "Buddhist devotees participate in 20th anniversary celebrations of Buddha statue in Gaya". 22 November 2007 இம் மூலத்தில் இருந்து 14 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190414180527/http://www.thaindian.com/newsportal/india-news/buddhist-devotees-participate-in-20th-anniversary-celebrations-of-buddha-statue-in-gaya_1006189.html.
- ↑ Tiwari, Deeptiman (6 November 2013). "Ranchi document helps NIA crack Bodh Gaya blast case". The Times of India இம் மூலத்தில் இருந்து 6 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131106102143/http://timesofindia.indiatimes.com/india/Ranchi-document-helps-NIA-crack-Bodh-Gaya-blast-case/articleshow/25281931.cms.
- ↑ Gaikwad, Rahi; Yadav Anumeha; Pandey Devesh (7 November 2013). "Patna terror cell behind Bodh Gaya strike too: NIA". The Hindu (Patna, Ranchi, New Delhi) இம் மூலத்தில் இருந்து 9 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131109171957/http://www.thehindu.com/news/national/patna-terror-cell-behind-bodh-gaya-strike-too-nia/article5322815.ece.
- ↑ "Serial Blasts rock Mahabodhi temple in Bodha gaya: terror attack, Center says". The Times of India. 7 July 2013 இம் மூலத்தில் இருந்து 9 July 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130709201724/http://timesofindia.indiatimes.com/india/Serial-blasts-rock-Mahabodhi-Temple-in-Bodh-Gaya-terror-attack-Centre-says/articleshow/20952763.cms.
- ↑ "Nine blasts in Bodh Gaya, 2 injured". The Hindu. 7 July 2013 இம் மூலத்தில் இருந்து 10 July 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130710180959/http://www.thehindu.com/news/national/other-states/nine-blasts-in-bodh-gaya-2-injured/article4891094.ece.
- ↑ "Five sentenced to life imprisonment in Bodh Gaya serial blasts case". Headlines Today இம் மூலத்தில் இருந்து 6 August 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180806114437/https://headlinestoday.org/national/bihar/735/five-sentenced-to-life-imprisonment-in-bodh-gaya-serial-blasts-case/.
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 16 June 2004. Retrieved 1 November 2008.
- ↑ "BSTDC halts AC Bus Services to Bodhgaya devoid of Passengers". Archived from the original on 9 August 2013. Retrieved 31 August 2013.
- ↑ "Bihar launches Tourist Caravan Service called Wonder on Wheel". The Biharprabha News. Archived from the original on 1 May 2013.
- ↑ "Bihar Tourism – Buddhist Circuit". Department of Tourism, Government of Bihar. Retrieved 5 August 2026.
- ↑ "Unstarred Question No. 5037 – Lok Sabha" (PDF). Ministry of Tourism, Government of India. Retrieved 5 August 2026.